அவல் லட்டு
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8
செய்முறை விளக்கம்:
*முந்திரியை பொடியாக உடைத்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
*அதே கடாயில் சிறிது நெய் விட்டு அவலை வறுத்து,ஆறியதும் நைசாக பொடிக்கவும்.சர்க்கரையையும் நைசாக பொடிக்கவும்
*பவுலில் பொடித்த அவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து சூடான நெய் ஊற்றி லட்டுகளாக பிடிக்கவும்.
பின் குறிப்பு:
*இங்கு நான் Thin Aval உபயோகித்துள்ளேன்.1/4 கப் சர்க்கரையே போதுமானது,விரும்பினால் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
*இந்த அளவில் 7 உருண்டைகள் வரும்.