பால்கோவா

தேவையான பொருட்கள்:

பால் -2 லிட்டர்

தயிர் -1 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை- 3 டேபிள்ஸ்பூன்

நெய் -1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

* பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்

*சிறுதீயில் பால் தீய்ந்துவிடாமல் கரண்டியால் கிளறி விடவும்

*பால் பாதி பாகம் வற்றி வரும் தயிர் சேர்க்கவும்.

*தயிர் சேர்த்ததும் பால் பனீர் மாதிரி திரிந்து இருக்கும்

*அத்தண்ணியை மேலோடு எடுத்துவிடவும்,இல்லையெனில் தண்ணீர் வற்றும் வரை  கிளறவும்.

*அடிப்பிடிக்காமல் இருக்க நெய் சேர்த்து கிளறவும்

*பின் சர்க்கரை சேர்த்து கரையும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

*ஆறியதும் நன்கு உதிர்ந்து பொலபொலவெண இருக்கும்.

பின் குறிப்பு:

*இதில் தயிர் சேர்ப்பதற்கு பதில் சிறிதளவு படிகாரம்( Alum) பொடித்து சேர்க்கலாம்.

*பால்  வற்றி வரும் போது குறைந்ததீயில் செய்யவும்

Related Videos