அவல் கேசரி
தேவையான பொருட்கள்:
அவல்- 1/2 கப்
நீர்- 2 கப்
சர்க்கரை- 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய் -1/8 கப்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர்-சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை -தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*அவலை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.
*கடாயில் சிறிது நெய் விட்டு அவலை வறுக்கவும்.
*பின் கொதிக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமா ஊற்றி கிளறவும்
*அவல் வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்
*கெட்டியாக வரும் சமயத்தில் கேசரிகலர் மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறவும்
*கடைசியாக மீதமுள்ள நெய், ஏலக்காய்த்தூள் மற்றும் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.