மா லாடு/பொட்டுக்கடலை உருண்டை
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை -1 கப்
சர்க்கரை- 1/2 கப்
ஏலக்காய் -2
நெய் -1/4 கப்
நெய்யில் வறுத்த முந்திரி- 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பொட்டுக்கடலையை நைசாக பொடித்துக் கொள்ளவும்.
*சர்க்கரையுடன் ஏலக்காய் விதை மட்டும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*பொட்டுக்கடலை மாவு, பொடித்த சர்க்கரை மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து,நெய்யை நன்கு சூடு செய்து மாவில் கலக்கவும்.
*சூடாக இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.
பின் குறிப்பு:
*ஏலக்காயின் தோலை தூக்கி எரியாமல் டீத்தூளில் கலந்து வைக்கலாம் அல்லது குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் தீர்த்தம் குடிப்பது போலவே இருக்கும்.