அம்மினி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1/2 கப்

தண்ணீர் - 1 கப்

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்+1 டீஸ்பூன்

உப்பு = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை விளக்கம்:

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்

*ஆறியதும் சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெந்த உருண்டைகள் மற்றும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்

*சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.

Related Videos