எள்ளு பூரண கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு- 1/2 கப்
நீர் -1 கப்
கறுப்பு எள் -1/3 கப்
வெல்லம்- 1/3 கப்
நல்லெண்ணெய்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*எள்ளை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.பின் அதனுடன் வெல்லத்தை துருவி 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*பாத்திரத்தில் 1 கப் நீர், எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*கொதிததும் அதனை அரிசிமாவில் ஊற்றி கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
*பின் மிருதுவாக மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக எடுத்து வட்டமாக தட்டி எள்ளு பூரணத்தை சிறிது வைத்து உருண்டையை மேல் நோக்கி மூடவும்
*இதே போல் அனைத்து உருண்டையிலும் செய்த பின்னர் ஆவியில் 6 -7 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பி.கு
*உருண்டை வெந்ததின் அடையாளமாக பார்க்கும் போது மினுமினுப்பாக இருக்கும்.
*உருண்டை எடுத்து உருட்டும் போது நல்லெண்ணெய் தொட்டு தட்டவும்