ஆடிக்கஞ்சி

ஆடி மாதம் வீசும் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்,அதனால் எங்கும் தூசியாக இருக்கும்,இதனால் பல நோய்கள் வரலாம்.இதைத் தவிர்க்கவே அம்மன் கோயில்களில் ஆடிமாதம் முழுவதும் கூழ் அல்லது கஞ்சி ஊற்றுவார்கள்.

கஞ்சியில் சின்ன வெங்காயம்,மாங்காய்,தேங்காய்த்துறுவல் சேர்ப்பாங்க.இதில் தேங்காய் துறுவலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்

நீர்- 21/2 கப்

உப்பு -தேவைக்கு

தேங்காய் துறுவல்- 1/4 கப்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -சிறிதளவு

செய்முறை விளக்கம்:

* குக்கரில் அரிசி மற்றும் நீர் சேர்த்து 3 -4 விசில் வரை வைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை நன்கு மசிக்கவும்.

*பின் தேவைக்கு உப்பு மற்றும் நீர் சேர்த்து கலக்கவும்.

*பரிமாறும் போது தேங்காய்த்துறுவல்+சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

Related Videos