நெய்(பொரித்த) கொழுக்கட்டை| ரவை கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

மெல்லிய ரவை -1/2 கப்

உப்பு -1 சிட்டிகை

பால்- 1/4 கப்+1 டேபிள்ஸ்பூன்

நெய்- 2 டீஸ்பூன்

எண்ணெய்/நெய் -பொரிக்க‌

பூரணத்திற்கு

தேங்காய்த்துறுவல்- 1 கப்

வெல்லம் -1/2 கப்

ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*ரவையில் உப்பு கலந்து பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்

*பிசைந்த மாவினை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் நெய் தொட்டு மாவினை நன்கு பந்துபோல மிருதுவாக பிசையவும்

*பூரணம் செய்ய,வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

*பின் மீண்டும் வெல்லநீரை கொதிக்கவைத்து தேங்காய்த்துறுவல் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி ஆறவைக்கவும்.

*மாவினை பெரிய உருண்டைகளாக எடுக்கவும்.

*ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல மெலிதாக தேய்த்து சிறு வட்ட வடிவ மூடியினால் வெட்டிக் கொள்ளவும்

*அதில் 1 டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து அப்படியே மேல் நோக்கி அழுத்தி மூடவும்.இப்போழுது குட்டி மோதகம் போல இருக்கும்

*இப்படியே அனைத்தையும் செய்து முடித்த பின் நெய்/எண்ணெயில் பொன்னிறமாக‌ பொரித்தெடுக்கவும்.

பின் குறிப்பு :

*அனைத்து மோதகங்களை செய்து முடித்த பின் காயாமல் இருக்க பேப்பர் போட்டு மூடி வைக்கவும்.

Related Videos