அப்பம்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -1/2 கப்

மைதா மாவு - 1/4 கப்+1/8 கப்

வெல்லம் -1/2 கப்

கனிந்த வாழைப்பழம் -1

பேக்கிங் சோடா+உப்பு  - தலா 1 சிட்டிகை

ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்

நெய் - சுடுவதற்கு

செய்முறை விளக்கம்:

*வெல்லத்தில் முழ்குமளவு நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.

* பாத்திரத்தில் வெல்லம்+நெய் தவிர அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்

*வெல்லநீரை சேர்க்கவும்.பின் தேவைக்கு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்

*மாலையில் மாவு லேசாக பொங்கி இருக்கும்

*குழிபனியார கல்லில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.

*கரண்டியால் மாவினை எடுத்து ஊற்றவும்

*5 நிமிடம் கழித்து மறுபக்கம் திருப்பி நெய் ஊற்றி வேகவைக்கவும்

*2 பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்

Related Videos