மா விளக்கு
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/4 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.
*உலர்ந்ததும் நைசாக பொடிக்கவும்.
*அதனுடன் வெல்லம் சேர்த்து பிசையவும்.அரிசியின் ஈரபதத்திலயே வெல்லம் பிசைய ஈசியாக இருக்கும்.
*உருண்டையாக பிடித்து நடுவில் குழிபோல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி படைக்கவும்.
பின் குறிப்பு:
அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து பிசையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையக்கூடாது