கார்த்திகைப் பொரி
தேவையான பொருட்கள்:
அவல் - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
எள் - 1 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*அவலை வெறும் கடாயில் நிறம் மாறாமல் பொரியும் வரை வறுக்கவும்.
*எள், தேங்காய்ப்பல் மற்றும் பாசிப்பருப்பு இவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்
*ஒரு பவுலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*பாத்திரத்தில் வெல்லம் போட்டு முழ்கும் வரை நீர் விட்டு கரையவிடவும்.
*வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்கவிடவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
*வெல்லபாகினை தண்ணீரில் விட்டால் உருண்டை கையில் எடுக்கும் பதம் வந்ததும் இறக்கி கலந்து வைத்துள்ள அவல்பொரியில் ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.
பின் குறிப்பு:
*இது உதிரியாகதான் இருக்கும்,உருண்டை பிடிக்கமுடியாது.
*நான் சாதாரண அவலில் செய்துள்ளேன்.
*நெற்பொரி/ அவல் பொரி இவை கார்த்திகைதீபத்தன்று மட்டும்தான் கடைகளில் கிடைக்கும்