பஞ்சாபி பிந்தி(வெண்டைக்காய்) மசாலா
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி - தலா 1
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா+மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வெண்டைக்காயை கழுவி துடைத்து 1 இஞ்ச் அளவில் நறுக்கி,கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 நிமிடங்கள் வரை வதக்கி தனியாக வைக்கவும்.
*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு மற்றும் தூள் வகைகள் என ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் வரை சிறுதீயில் கிளறி கசூரி மேத்தி மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து இறக்கவும்.
*சாதம்(அ) ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.