பருப்பு பொடி
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/2 கப்
பொட்டுக்கடலை -1/2 கப்
மிளகு+சீரகம் -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -10
காஷ்மிரி மிளகாய் -2
பெருங்காய கட்டி -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -1 டீஸ்பூன்
கல் உப்பு-தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம் பொரித்து எடுத்த பின்,மிளகாய்களை வறுத்து எடுக்கவும்.
*அதே எண்ணெயில் துவரம் பருப்பு சேர்த்து பொன் முறுவலாக வறுத்தெடுக்கவும்.
*பின் மிளகு,சீரகம்,பொட்டுக்கடலையை வறுத்து ஆறவைக்கவும்
*அனைத்தும் நன்றாக ஆறியபின் மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து முதலில் அரைக்கவும்
*பின் மற்ற பொருட்களை சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக பொடித்து எடுக்கவும்
*இந்த பொடியை சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.இட்லி,தோசைக்கு கூட சாப்பிட நன்றாக இருக்கும்.
பின் குறிப்பு:
*விரும்பினால் இதனுடன் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்