சின்ன வெங்காய சட்னி | Small Onion Chutney

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1/2 கப்

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

இஞ்சி -1 சிறுதுண்டு

காய்ந்த மிளகாய் - 5

புளி - 1 நெல்லிக்காயளவு

தனியா- 1 டேபிள்ஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - வாசனைக்கு

கறிவேபிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி+காய்ந்த மிளகாய்+தனியா இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

*பின் அதே கடாயில் வெங்காயம் மற்றும் தக்காளியை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் தேங்காய், புளி, இஞ்சி, தனியா மற்றும் காய்ந்த மிளகாய் இவற்றை முதலில் மைய அரைத்து பின் வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்

Related Videos