கத்திரிக்காய் கொத்சு | Brinjal Gothsu

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - பாதி

தக்காளி - 1 பெரியது

கத்திரிக்காய் - 1 பெரியது

புளிகரைசல் - 1/4 கப்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வெங்காயம், தக்காளி மற்றும் கத்திரிக்காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கி முழ்குமள்வு நீர் விட்டு 3விசில் வரை வேகவைத்து எடுக்கவும்

*பின் நன்கு மசிக்கவும்.

*அதனுடன் உப்பு, புளிகரைசல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.

பின் குறிப்பு:

*கொத்சு தண்ணியாக இருந்தால் கொதிக்கும் போது 1 குழிக்கரண்டி இட்லிமாவை கரைத்து கொதிக்கவைத்து இறக்கவும்.

Related Videos