வெள்ளை பணியாரம்&வரமிளகாய் சட்னி | vellai paniyaram and Vara Milagai Chutney

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1/2 கப்

புழுங்கலரிசி -1/8 கப்

வெள்ளை முழு உளுந்து -1/8 கப்

சர்க்கரை -1/2 டீஸ்பூன்

பால் -1/8 கப்

உப்பு -தேவைக்கு

எண்ணெய் -பொரிக்க

செய்முறை விளக்கம்:

*அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மிக கெட்டியாக இல்லாமலும் நீர்க்க இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.

*கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கலக்கவும்.

*எண்ணெய் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றினால் தானாகவே வெந்து மிதந்து வரும் போது திருப்பிவிட்டு  1-2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

*அவர்கள் கொடுத்துள்ள அளவுபடி செய்தால் பணியாரம் சரியான பூ வடிவத்தில் வரும்.

*பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவேண்டும்.

வரமிளகாய் சட்னி

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் -5

வெங்காயம் - 1/2  சிறியது

தக்காளி - 1 சிறியது

பூண்டுப்பல் -1

புளி -1 ப்ளுபெர்ரி பழளவு

உப்பு -தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் -1/2 டீஸ்பூன்

பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து தாலித்து சேர்க்கவும்

Related Videos