ப்ரோக்கலி சாலட் | Broccoli Salad
தேவையான பொருட்கள்:
ப்ரோக்கலி பூக்கள் - 1 கப்
லெட்டூஸ் இலைகள்- 5
சோளம் - 1/4 கப்
செர்ரி தக்காளி - 5
வெள்ளரிக்காய் ஸ்லைஸ் - 10
ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*ப்ரோக்கலியை உப்பு கலந்த சுடு நீரில் 5 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.
*ஒரு பவுலில் காய்கள்+லெட்டூஸ் இலைகளை ஒன்றாக கலக்கவும்.
*எண்ணெய், வினிகர், உப்பு மற்றும் மிளகுத்தூள் இவற்றை ஒன்றாக கலந்து சாலட்டில் ஊற்றி பரிமாறவும்.