புல்கா (ரொட்டி) செய்வது | How to make soft Phulka
தேவையான பொருட்கள்:
கோதுமைமாவு - 2 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்
நெய் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*கோதுமைமாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி 15 நிமிடங்கள் வைத்து சம உருண்டைகளாக எடுக்கவும்
*உருண்டையை வட்டமாக மெலிதாகவோ அல்லது தடிமனமாகவோ தேய்க்க வேண்டாம்.
*தவாவை நன்கு காயவைத்து ரொட்டியை போடவும்.அடிப்பக்கம் ப்ரவுன் கலரில் வந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு 2 நிமிடங்களுக்கு பின் நேரடியாக அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கவும்
*விரும்பினால் நெய்/எண்ணெய் தடவுலாம்.