பாசிப்பருப்பு துவையல் | Moong Dal Thuvaiyal
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
பூண்டுப்பல் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
*மிக்ஸியில் முதலில் பாசிப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாயையும் தண்ணீர்விடாமல் பவுடராக அரைத்து பின் தேங்காய்துறுவல், புளி மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து கெட்டியாக மைய அரைக்கவும்.
*கடைசியாக பூண்டுப்பல் சேர்த்து அரைத்தெடுக்கவும்