ஆவக்காய் ஊறுகாய் |ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் ஊறுகாய் | Andhra Special Mango Pickle
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 2 பெரியது
கடுகுபொடி - 3/4 கப்
வரமிளகாய்த்தூள் - 3/4கப்
பூண்டுப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன் + 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 3/4 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 கப் + 1/8 கப்
உப்பு - 3/4 கப் மைனஸ் 2 1/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மாங்காயை கழுவி துடைத்து கொட்டையுடன் 2ஆக நறுக்கவும்.
*பின் கொட்டை மற்றும் மெலிதாக இருக்கும் வெள்ளை தோல் இவற்றை நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
*நறுக்கிய மாங்காய் துண்டுகள் 3 கப் அளவில் எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன மற்ற அளவுகள் சரியாக இருக்கும்.
*நறுக்கிய மாங்காய் துண்டுகளை துணியால் ஈரம் போக நன்கு துடைத்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் மாங்காய் துண்டைகளை எடுத்துக் கொள்ளவும்
*கடுகுப்பொடி, வெந்தயம் மற்றும் பூண்டுப்பல் சேர்க்கவும்.
*மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
* நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்
*சுத்தம் செய்த பாட்டிலில் போட்டு ஊறவைக்கவும்
*மறுநாள் ஊறுகாயை சுவைபார்க்கவும்.உப்பு மற்றும் காரம் குறைந்தால் சேர்க்கவும்.
*இந்த அளவுபடியே செய்தால் எதுவும் சேர்க்க தேவையில்லை.
*ஊறுகாயின் மேலே 1/2 இஞ்ச் அளவு மிந்தந்தால் ஒகே,இல்லையெனில் 1/8 கப் மேலும் நல்லெண்ணெய் ஊற்றவும்
பின் குறிப்பு:
*பயன்படுத்தும் போது ஊறுகாயை சிறிய பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
*1 வருடம்வரை வைத்திருக்கலாம்.
*ஈரமில்லாத கரண்டியை பயன்படுத்தவும்.
*ஊறுகாயை பாட்டில் அல்லது செரமிக் ஜாடியில் வைத்திருந்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும்,நிறம் மாறாமலும் இருக்கும்.
*இதில் வெந்தயம் பதில் 3 டேபிள்ஸ்பூன் கறுப்பு கடலையை பயன்படுத்தலாம்