கறிவேப்பிலை துவையல் | curry leaves thogayal
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
புளி - நெல்லிக்காயளவு
சின்ன வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி கா.மிளகாய் மற்றும் தேங்காய் துறுவலை மட்டும் லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் வெங்காயம் தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்
*கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின் குறிப்பு:
*இந்த துவையல் கொரகொரப்பாக அரைத்தால் மட்டுமே சுவையாக இருக்கும்.
*1 நாள்வரை ப்ரிட்ஜில்வைத்திருந்து பயன்படுத்தலாம்.