எலுமிச்சை ஊறுகாய் | Naranga Achar
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -5
கறிவேப்பிலை- 2 கொத்து
மிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி+பெருங்காயப்பொடி- தலா 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கடுகு- 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*எலுமிச்சையை பொடியாக நறுக்கி கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.
*பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து கலந்து வைத்த எலுமிச்சை சேர்த்து கிளறவும்
*பின் 1 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்
*நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது இறக்கவும்
*ஆறியதும் சுத்தமான பாட்டிலில் வைத்திருந்து பயன்படுத்தவும்.