தேங்காய் துவையல் | Coconut Thuvaiyal
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
வெ.உ.பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
புளி -சிறிய நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம்/பெருங்காயத்தூள் மற்றும் உளுந்தம்பருப்பு இவற்றை தனிதனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்
*மிக்ஸியில் காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து முதலில் பொடித்த பின் தேங்காய்த்துறுவல், புளி, உப்பு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்