கொத்தமல்லி தொக்கு | Cilantro Thokku
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி தழை -2 கட்டு
காய்ந்த மிளகாய் - 8
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -3/4 டீஸ்பூன்
இஞ்சி - 2 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு
கடுகு -1/2 டீஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
நல்லெண்ணெய் - 1/4 கப் + 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மல்லித்தழையில் உள்ள தடினமான தண்டுபகுதியை நீக்கவும்.
*கொத்தமல்லிதழையை மண்ணில்லாமல் அலசி,துணியில் ஈரம் போக உலர்த்தவும்.
*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய்,வெந்தயம்,பெருங்காயத்தூள் வறுக்கவும்
*மீதமுள்ள எண்ணெயில் இஞ்சியை வறுத்தபின் கொத்தமல்லி தழையை சேர்த்து வதக்கவும்.புளியையும் சேர்த்து லேசாக வதக்கியபின் அடுப்பை அணைக்கவும்
*முதலில் மிக்ஸியில் மிளகாய், வெந்தயம், உப்பு மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து முதலில் பொடிக்கவும்
*அதன்பின் கொத்தமல்லிதழை,இஞ்சி,புளி சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*கொரகொரப்பாக அரைக்கவும்.அதில் தான் சுவையே இருக்கின்றது
*பின் மீதமுள்ள எண்ணெயில் கடுகு சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
*நன்கு ஆறியதும் காற்றுபுகாத பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்
பின் குறிப்பு:
*இதனை இட்லி,தோசை க்கு தொட்டு சாப்பிடலாம் அல்லது சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.
*தயிர் சாதத்திற்கும் நன்றாக இருக்கும்