சைனீஸ் கேபேஜ் சாம்பார் | Bok Choy sambhar

தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த சைனீஸ் கேபேஜ் - 1 கப்

துவரம் பருப்பு - 1 கப்

சின்ன வெங்காயம் - 10

பூண்டுப்பல் - 5

அரிந்த தக்காளி - 1

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

புளி கரைசல் - 1/4 கப்

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்

பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை விளக்கம்:

*துவரம் பருப்புடன் மஞ்சள்தூள், பூண்டுப்பல், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி அனைத்தையும் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

* பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம், கேபேஜ் மற்றும் சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி புளிகரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதித்ததும் வெந்த பருப்பை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கீரை சாம்பார் மாதிரி நல்ல சுவையில் இருக்கும் இந்த சாம்பார்

Related Videos