கொத்தவரங்காய் பிட்லை | Cluster Beans (Kothavarangai ) Pitlai

கொத்தவரங்காய் தவிர பாகற்காய்,கத்திரிக்காய்,வாழைப்பூவில் பிட்லை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

கறுப்பு/வெள்ளை கடலை- 2 டேபிள்ஸ்பூன்
கொத்தவரங்காய் -1/4 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1/4 கப்
புளி கரைசல் -1/2 கப்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- சிறிதளவு

எண்ணெயில் வறுத்து பொடிக்க‌:

காய்ந்த மிளகாய்- 7
தனியா -1 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
தேங்காய்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌:

கடுகு+உளுத்தம்பருப்பு தலா -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடிக்கவும் அல்லது நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய்  விட்டு கொத்தவரங்காய் பொடியாக நறுக்கி வதக்கவும்.பின் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த கடலை, துவரம்பருப்பு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.

*கெட்டியாக இருந்தால் தேவைக்கு நீர் சேர்க்கவும்.


*நன்கு கொதித்த பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*சுவையான பிட்லை வறுவலுடன் சாப்பிட செம சுவை!!

Related Videos