21 காய் சாம்பார் | 21 Vegetable Sambar

முருங்கைக்காய்,கத்திரிக்காய்,மாங்காய்,கேரட்,பீன்ஸ்,கோஸ்,பாகற்காய்,

கோவைக்காய்,புடலங்காய்,பீர்க்கங்காய்,சுரைக்காய்,வெள்ளை பூசணிக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,காலிபிளவர்,பச்சைபட்டாணி,

முருங்கைக்கீரை,உருளைக்கிழங்கு,

சேப்பக்கிழங்கு,வாழைக்காய்,சேனைக்கிழங்கு,வெண்டைக்காய்.அந்தந்த காய்களின் அளவைக் கொஞ்சமாக சேர்க்கவும்.இந்த சாம்பார் கொஞ்சம் நீர்க்க இருந்தால்தான் நன்றாகயிருக்கும்

தேவையான பொருட்கள்:

வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்

புளிகரைசல் - 1/2 கப்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

21 காய்கள் - தேவைக்கு

நறுக்கிய தக்காளி - 1

சாம்பார் வெங்காயம் - 10

உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - வாசனைக்கு

காய்ந்த மிளகாய் – 2

செய்முறை விளக்கம்:

*தக்காளி, பச்சை மிளகாய், காய்கள் முருங்கைக்கீரை மற்றும் மாங்காய் தவிர எண்ணெய் விட்டு வதக்கிக் வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவிடவும்.

*புளிகரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் வேகவைத்த காய்கள், உப்பு சேர்த்து மாங்காய், முருங்கைக்கீரை மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்.

*மாங்காய் வெந்ததும் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சாம்பார் வெங்காயத்தை போட்டு வதக்கி சாம்பாரில் சேர்க்கவும்.

Related Videos