பிடி கருணை மசியல் | Pidi Karunai Masiyal
தேவையான பொருட்கள்:
பிடிகருணை - 6
சிறிய தேங்காய் ஒடு - பிடிகருணை வேகவைக்க
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
செய்முறை விளக்கம்:
*பிடி கருணையை மண்ணில்லாமல் கழுவி தேங்காய் ஒடு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேகவிடவும்.
*வெந்ததும் தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய்,இஞ்சி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
*பின் மசித்த கருணை,உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*லேசாக கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
பின் குறிப்பு:
*இதனை சாதத்தில் சேர்த்து வறுவலுடன் சேர்த்து சாப்பிடலாம்.அல்லது பக்க உணவாக காரகும்புடன் சேர்த்து சாப்பிடலாம்