வேப்பம்பூ ரசம் | Neem Flowers Rasam

குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு.

இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது.

தேவையான பொருட்கள்:

புளிகரைசல் - 2 கப்

தக்காளி - 1 பெரியது

ரசப்பொடி - 1 1/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்(விரும்பினால்)

மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நெய்(அ)எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கா.மிளகாய் - 1

வேப்பம்பூ - 2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*புளிகரைசலில் தக்காளியை கரைத்து அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்

*பச்சை வாசனை அடங்கியதும் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிட்டு நுரைவரும் போது இறக்கவும்.

*கடாயில் நெய் விட்டு கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேப்பம்பூவை சேர்த்து கருகாமல் வறுத்து ரசத்தில் சேர்க்கவும்

பின் குறிப்பு:

*வேப்பம்பூ கருக விட்டால் ரசம் கசக்கும்.

*கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்தால் ரசத்தின் சுவை மாறுபடும்.

*வேப்பம்பூ நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும்

Related Videos