கண்டத்திப்பிலி | Kandathippili Rasam
*கண்டத்திப்பிலி இது மிளகு குடும்பத்தை சேர்ந்தது.
* சளி,இருமலுக்கு இந்த திப்பிலி ரசம் மிக நல்லது.
*உடல்வலி மற்றும் சோர்வு நீங்கவும் கண்டத்திப்பிலி மிக நல்லது.
தேவையான பொருட்கள்:
புளிகரைசல் -2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க:
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயதூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெயில் வறுத்து பொடிக்க
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கண்டத்திப்பிலி - 4 குச்சிகள்
துவரம் பருப்பு -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்
*புளிகரைசலில் உப்பு, மஞ்சள்தூள் மற்றும் பொடித்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்