எலுமிச்சை பழரசம் | Lemon Rasam

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1

தக்காளி - 4

வேக வைத்த துவரம்பருப்பு - 1/4 கப்

மஞ்சள்தூள் -1 சிட்டிகை

கொத்தமல்லித்தழை -சிறிது

ரசப்பொடி - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்

கறிவேப்பில்லை - சிறிது

கீறிய பச்சை மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - வாசனைக்கு

நெய் - 1 1/2  டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து 2 கப் நீரில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் வெந்த பருப்பை கொட்டி 1 கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் எலுமிச்சைசாறு பிழிந்து கலக்கவும்.சூட்டோடு சாறு பிழிந்து விட்டால் ரசம் கசக்கும்.

*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்

Related Videos