பொங்கல் குழம்பு | Pongal Khuzhambu

இந்த குழம்பிற்க்கு மஞ்சள் பூசணிக்காய்,சக்கரை வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய் கொத்தவரை,செப்பகிழங்கு,சேனைக்கிழங்கு,உருளை,பச்சை மொச்சை (அ)கொண்டைக்கடலை,வெள்ளை பூசணி ,கத்திரிக்காய் என நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்வார்கள்.

தேவையான பொருட்கள்:

காய்கள் - 1 கப்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 கப்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளிகரைசல், பொடித்த பொடி மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் தாளித்துக் கொட்டவும்.

*பால்பொங்கலுடன் இந்த குழம்பு சாப்பிட சூப்பர்ர்!!

Related Videos