வெள்ளரிக்காய் தால் | Cucumber Dal

தேவையான பொருட்கள்:

தோல் நீக்கி நறுக்கிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
துவரம் பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை விளக்கம்:

*குக்கரில் பருப்பு, வெள்ளரிக்காய், தக்காளி, மஞ்சள்தூள் மற்றும்  சிறிது நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*அரைத்த விழுதை வேகவைத்த பருப்பில் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்பில் சேர்த்து எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

Related Videos