கமன் டோக்ளா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
எள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
செய்முறை விளக்கம்:
*ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா, உப்பு, தயிர், மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தேவையானளவு நீர் கலந்து இட்லி மாவு பதத்திற்க்கு கலந்து 2 மணிநேரம் புளிக்கவிடவும்.
*பின் ஒரு தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.
*ஆறியதும் துண்டுகள் போட்டு தேங்காய்த்துறுவல் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
*க்ரீன் சட்னியுடன் சாப்பிட சூப்பராகயிருக்கும்..