கோதுமை ரவை கிச்சடி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
கேரட் - சிறியது
பீன்ஸ் - 5
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.கேரட்டை துறுவவும்,பீன்ஸை நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*கோதுமை ரவையை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் தாளிக்க குடுத்துள்ளவைகளை  போட்டு தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் துருவிய கேரட், பட்டானி மற்றும் பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.

*பின் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் மற்றூம் காய் வேக 1/2 கப் தண்ணீர் மொத்தம் 2 1/2 கப்தண்ணீர் வைத்து ரவை மற்றும் உப்பு போட்டு குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் வைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் கிச்சடியை கிளறி விடவும்.

பின் குறிப்பு:
*இந்த கிச்சடி மிகவும் நன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.

Related Videos