பரோட்டா&முட்டை குருமா
தேவையான பொருட்கள்:
பரோட்டாவுக்கு:
மைதா - 5 கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்+தேவைக்கு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
குருமாவுக்கு:
முட்டை - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மல்லித்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை விளக்கம்:
*மைதா+உப்பு+நெய்+சர்க்கரை மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை நன்கு தளர பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.
*ராத்திரி செய்வதாக இருந்தால் காலையிலேயே பிசைந்து வைக்கலாம்.
*ஊறிய மாவை நன்கு அடித்து தேவையான அளவில் உருண்டைகள் போடவும்.
*ஒவ்வொரு உருண்டையின் போல் எண்ணெய்த் தடவி மறுபடியும் ஈரத்துணியால் மூடி 1/2 மணிநேரம் ஊறவிடவும்.
*பின் உருண்டையை பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து கையால் நன்கு அடிக்கவும்.அதாவது கிழிந்த பனியன் போல நன்கு அடிக்கவும்.
*அதை அப்படியே சுருட்டி அதன் மேல் எண்ணெய்த் தடவி வைக்கவும்.இப்படியாக அனித்து உருண்டைகளை செய்யவும்.
* கடாய் காயவைத்து உருட்டிய உருண்டையை எண்ணெய் தொட்டு கையால் தட்டி வேகவைத்து எடுக்கவும்.
*4 பரோட்டக்கள் சுட்டதும் 2 கையாலும் பரோட்டகளை தட்டவும்.அப்போழுது தான் லேயராக வரும்.
*முட்டையின் வெள்ளைகரு மற்றும் மஞ்சள்கரு தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைகரு நன்கு அடித்து கடாயில் ஊற்றி பொடிமாஸ் போல கொத்தி எடுத்து தனியாக வைக்கவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, கரம்மசாலா மற்றும் தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*தேவையானளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.
*கொதித்ததும் மஞ்சள்கருவை ஒவ்வொன்றாக ஊற்றி வேகவிடவும்.
*மஞ்சள் கரு வெந்ததும் பொடித்த வெள்ளைக்கருவினை போட்டு ஒரு கொதி கொதித்ததும் இறக்கவும்.