ரவா கிச்சடி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கேரட் - 1
பீன்ஸ் - 10
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை விளக்கம்:
*ரவையை சிறிது நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்.பீன்ஸ் மற்றும் கேரட் நடுத்தர சைஸில் நறுக்கவும்.
*பாத்திரத்தில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு மற்றும் காய்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*காய் வேகுவதற்காக 1/2 கப் நீர் விட்டு வேகவிடவும்.இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.
*காய்கள் வெந்ததும் வறுத்த ரவையை போட்டு கிளறி கொதிக்கும் நீர் சேர்த்து கிளறவும்.இப்படி செய்வதால் ரவை கட்டி விழாமல் இருக்கும்.
*ரவை நன்கு வெந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து சட்னியுடன் பரிமாறவும்.