பார்லி பணியாரம்

பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

பார்லி - 1 கப்
ப்ரவுன் அரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
எண்ணெய் = தேவைக்கு

செய்முறை விளக்கம்:

*பார்லி, அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்து  அரைத்து உப்பு கலந்து புளிக்கவிடவும்.

*நன்கு புளித்த மாவை 2 கப் அளவு எடுத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து  பணியாரக் குழியில் ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

*இந்த மாவில் தோசையும் சுடலாம்.


Related Videos