கத்திரிக்காய் சாண்ட்விச்
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
கட்லட் - 5 விருப்பமானது
கோஸ் இலைகள் - 5
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்க்கு
உப்பு - தேவைக்கு
வெஜ் ஆம்லெட் செய்வதற்க்கு:
கடலைமாவு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*ஆம்லெட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து மெல்லிய தோசைகளாக ஊற்றி 2பக்கமும் வேகவைத்து தேவையானளவில் துண்டுகளாக்கவும்.
*கத்திரிக்காயை வட்டமாகவும்,சிறிது தடிமனாகவும் நறுக்கி உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து தோசைக்கல்லில், வெண்ணெயில் லேசாக 2பக்கமும் டோஸ்ட் செய்யவும்.
*கோஸ் இலைகளை சிறுதுண்டுகளாகவும்,தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை வட்டமாகவும் வெட்டவும்.
*நம் விருப்பத்திற்கேற்ப கத்திரிக்காய், கோஸ் இலை, வெள்ளரிக்காய், கட்லட்(அ)வெஜ் ஆம்லெட், தக்காளி, கோஸ் இலை மற்றும் கத்திரிக்காய் என அடுக்கி பரிமாறவும்.