நாண்
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மைதா+உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலக்கவும்.
*தயிருடன் மைதா கலவையை கலந்து தேவையான நீர் சேர்த்து சற்று தளர்த்தியான பதத்தில் பிசையவும்.
*கடைசியாக எலுமிச்சை சாறை மாவில் கலந்து நன்கு பிசையவும்.
*அதனை ஈரத்துணியால மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*6-7 மணிநேரங்களில் மாவு இரு மடங்காக உப்பியிருக்கும்.
*உப்பியிருக்கும் மாவை மீண்டும் கைகளால் மிருதுவாக பிசையவும்.
*மைதா மாவை பலகையில் தூவி ஒரு உருண்டையை எடுத்து கைகளில் ஒட்டாதவாறு பிசையவும்.
பட்டர் நாண் / Butter Naan:
*ஒவல் வடிவத்தில் உருண்டையை கைகளால் இழுக்கவும்.
*ஒரு பக்கத்தில் தண்ணீர் தடவி,நான் ஸ்டிக் கடாயை அடுப்பில் காயவைத்து தண்ணீர் தடவிய பக்கத்தை கடாயில் படுமாறு வைக்கவும்.
*அடிப்பக்கம் வெந்ததில் அடையாளமாக பப்பிள்ஸ் வரும்,உடனை தவாவை திருப்பி நேரடியாக அடுப்பில் காட்டவும்.
*நாண் வெந்ததும் தானாகவே கடாயிலிருந்து வந்துவிடும்.
*கவனமாக காட்டவேண்டும்,இல்லையெனில் நாண் தீய்ந்துவிடும்.
*மேல் பக்கத்தில் உருகிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
*இப்போழுது பட்டர் நாண் ரெடி!!
பின் குறிப்பு: