வெள்ள பணியாரம் & வரமிளகாய்சட்னி
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1/2 கப்
புழுங்கலரிசி -1/8 கப்
வெள்ளை முழு உளுந்து -1/8 கப்
சர்க்கரை -1/2 டீஸ்பூன்
பால் -1/8 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை விளக்கம்:
*அரிசி+உளுந்து இரண்டையும் ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்கவும்.
*மிக கெட்டியாக இல்லாமலும் நீர்க்க இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.
*கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கலக்கவும்.
*எண்ணெய் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றினால் தானாகவே வெந்து மிதந்து வரும் போது திருப்பிவிட்டு 1-2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
பின் குறிப்பு:
*அவர்கள் கொடுத்துள்ள அளவுபடி செய்தால் பணியாரம் சரியான பூ வடிவத்தில் வரும்.
*பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவேண்டும்.
வரமிளகாய் சட்னி
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் -5
வெங்காயம் - 1/2 சிறியது
தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் -1
புளி -1 ப்ளுபெர்ரி பழளவு
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து தாலித்து சேர்க்கவும்.