சுரைக்காய் முருங்கைக்கீரை அடை

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை + பச்சை பயிறு+மைசூர் பருப்பு - தலா 1/2 கப்
முருங்கை கீரை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் -4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு +உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*பருப்பு வகைகளை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து  காய்ந்த மிளகாய், உப்பு மற்றும்  சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை பொருட்களை தாளித்து வெங்காயம் மற்றும் முருங்கை இலை சேர்த்து வதக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்.

*துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.கெட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.

*தவாவில் எண்ணெய் விட்டு அடைகளாக வார்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Related Videos