தால் பக்வான்
தால் கடலைப்பருப்பில் செய்வது,பக்வான் என்பது நம்ம ஊரு மைதா பூரி போல,ஆனால் இதனை உப்பவிடாமல் முள்கரண்டியால் குத்தி கிரிஸ்பியாக தாலுடன் பரிமாற வேண்டும்.
பக்வான் செய்ய நான் பாதியளவு மைதா+கோதுமை மாவு சேர்த்து செய்துள்ளேன்.
தால் செய்ய:
கடலைப்பருப்பு -1/2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
c
*கடலைப்பருப்பை கழுவி 20 நிமிடம் ஊறவைத்து,குக்கரில் மஞ்சள்தூள் மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் மிளகாய்த்தூள், கரம் மசாலா, தனியாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.
பக்வான் செய்ய:
மைதா- 1/2 கப்
கோதுமை மாவு -1/2 கப்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்+பொரிக்க
செய்முறை விளக்கம்:
*பாத்திரத்தில் மைதா, கோதுமைமாவு, உப்பு, சீரகம் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
*பின் தேவைக்கு நீர் சேர்த்து பூரிக்கு பிசைவது போல் மாவை பிசைந்து ஈரதுணியால் மூடி 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பின் சிறு உருண்டையாக எடுத்து பூரிக்கு தேய்ப்பது போல மாவை உருட்டி முள் கரண்டியால் ஆங்காங்கே குத்திவிடவும்.
*சூடான எண்ணெயில் போட்டு 2 பக்கமும் க்ரிஸ்பியாக பொரித்தெடுக்கவும்.
*பரிமாறும் போது பொடியாக அரிந்த வெங்காயம், இனிப்பு மற்றும் புதினா சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.