இடியாப்பம் ஸ்ட்டூ
தேவையான பொருட்கள்:
நீளமாக நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய்- 2
உருளை- 1 பெரியது
கேரட்- 1 பெரியது
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/4 டீஸ்பூன்
இரண்டாம் தேங்காய்ப்பால்- 3/4 கப்
முதல் தேங்காய்ப்பால் -1/4 கப்
உப்பு -தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்- 2 டீஸ்பூன்
மிளகு- 5
கிராம்பு- 2
ஏலக்காய்- 1
பட்டை -சிறுதுண்டு
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை விளக்கம்:
*கேரட் மற்றும் உருளையை தோல் சீவி விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
*நறுக்கிய இஞ்சி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறுதீயில் நிறம் மாறாமல் வதக்கவும்.
*வதங்கியதும் கேரட் மற்றும் உருளையை சேர்த்து லேசாக வதக்கி 2ஆம் பாலை ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.
*5- 6 நிமிடங்களில் காய் வெந்த பிறகு தேங்காய் முதல் பாலை ஊற்றி இறக்கவும்.
பின் குறிப்பு:
*வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்குவது முக்கியம்.
*இதில் பீன்ஸ் கூட சேர்க்கலாம்.