உடுப்பி ரசம் | Udupi Rasam

தேவையான பொருட்கள்:

தக்காளி -2

துவரம்பருப்பு -1/3 கப்

புளி -சிறிய எலுமிச்சை பழளவு

வெல்லம்- 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை -1 கைப்பிடியளவு

கறிவேப்பிலை- 1 கொத்து

மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

உடுப்பி ரசப்பொடி- 2 டேபிள்ஸ்பூன்

கீறிய பச்சை மிளகாய்- 2

உப்பு -தேவைக்கு

தாளிக்க‌:

எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்- 1

கறிவேப்பிலை- 1 கொத்து

உடுப்பி ரசப்பொடி செய்ய‌

காய்ந்த மிளகாய்- 2

தனியா- 2 டீஸ்பூன்

தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை- 1 கொத்து

வெந்தயம்- 1/2 டீஸ்பூன்

சீரகம்- 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

*துவரம்பருப்பை நன்கு குழைய வேகவைக்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை தனிதனியாக எண்ணெயில் வறுத்து பொடிக்கவும்

*புளியை 2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள், பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்

*பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி மற்றும் 1 டேபிள்ஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும் .(ரசப்பொடி சேர்த்து கொதிக்கும் போது வீடே கமகமக்கும்

*தக்காளி நன்கு குழைய வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு, தேவைக்கு நீர் , உப்புமற்றும்  மீதமுள்ள ரசப்பொடி சேர்க்கவும்

*1 கொதி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்

Related Videos