மாம்பருப்பு குழம்பு | Mangoseed Kuzhambu

தே.பொருட்கள்:

காயவைத்தெடுத்த மாங்கொட்டை - 2

புளிகரைசல் - 1 1/2 கப்

மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

பூண்டுப்பல் - 5

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*மாங்கொட்டையை சுத்தியால் தட்டி பொடிக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய் விட்டு மாங்கொட்டை+சீரகம்+மிளகு+சின்ன வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை அனைத்தையும் வதக்கி மைய அரைக்கவும்.

*புளிகரைசலில் உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய்விட்டு வடகத்தை போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்

Related Videos