எரிசேரி | Erissery with Yam
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 1/2 கப்
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
நீர் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு
செய்முறை விளக்கம்:
*வாழைக்காயை தோல் சீவாமல் சிறு துண்டுகளாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள், சேனைக்கிழங்கு துண்டுகள், உப்பு, நீர் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வேகவிடவும்.
*1/4 கப் தேங்காய்துறுவலுடன் சீரகம் சேர்த்து மைய அரைத்து காய்கள் வெந்ததும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாலித்து மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்துறுவலை பொன்முறுவலாக வறுத்து சேர்க்கவும்.
பின் குறிப்பு:
*வாழைக்காயை தோல் சீவினால் காய் குழைந்துவிடும்