தக்காளிக்காய் அவியல் | Green tomato kootu
தேவையான பொருட்கள்:
தக்காளிக்காய்- 6 நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
அரைக்க:
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 2
சீரகம்- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 2
செய்முறை விளக்கம்:
*தக்காளிக்காயினை நீளவாக்கில் வெட்டி,பாத்திரத்தில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நீரினை மிக குறைவாக சேர்த்து வேகவிடவும்
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் சின்ன வெங்காயம் தவிர மற்ற அனைத்தையும் நைசாக அரைக்கவும்.கடைசியாக சின்ன வெங்காயம் சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்
*காய் வெந்ததும் அரைத்த மசாலா சேர்த்து மேலும் 3- 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
*கடைசியாக தேங்காய் எண்ணெய் மற்றும்கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்
*15 நிமிடங்கள் கழித்து பரிமாறினால் மிக சுவையாக இருக்கும்.
பின் குறிப்பு:
*காய் சீக்கிரம் வெந்து விடும்,அதனால் கவனம் தேவை.
*மசாலா சேர்த்து கிளறும் போது கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தவும்,இதனால் காய் குழையாமல் இருக்கும்.
*கறிவேப்பிலை தே.எண்ணெய் சேர்த்த பின்,சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.அவையிரண்டு மணமும் சேர்ந்து சாப்பிட சூப்பராயிருக்கும்.