அரைத்துவிட்ட சாம்பார் | Araituvitta Sambhar
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - 1கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 4
மணத்தக்காளிகீரை - 1 சிறிய கட்டு
வெங்காயம்.தக்காளி - தலா 1
புளிகரைசல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 2
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தனியா - 1 டேபிள்ச்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*மணத்தக்காளிக்கீரையில் இருக்கும் விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
*பருப்பை மஞ்சள்தூள், பூண்டு மற்றும் கீரை விதை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.
*கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி மற்றும் கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் புளிகரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியிலிருந்து 1டேபிள்ஸ்பூன் மற்றும் வேகவைத்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
பின் குறிப்பு:
*எந்த கீரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.கீரைக்கு பதில் விரும்பிய காய்களும் சேர்த்து செய்யலாம்.