நெத்திலி கருவாடு வறுவல் | Anchovies dry fish fry
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு -100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி -2
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
*கருவாட்டை சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயம் மற்றும் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*கடாயில் எண்ணெயில் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,நன்கு வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கி வரும் போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*1/2 கப் தன்ணீர் மற்றும் கருவாடு போட்டு நன்கு வேகவிட்டு நீர் சுண்டும் வரை நன்கு சுருள கிளறி இறக்கவும்.
*ஈஸி நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.